சிறுமியை திருமணம் செய்த சிறுவன் கைது
சிறுமியை திருமணம் செய்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே கிராமத்தில் ஒரு சிறுமியை ஒரு சிறுவன் திருமணம் செய்ததாக கிடைத்த தகவலின் பேரில் சமூக நல விரிவாக்க அலுவலர் பானு அங்கு சென்று விசாரணை நடத்தினார்.
விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த ஒரு சிறுவனும், ஒரு சிறுமியும் 10-ம் வகுப்பு படிக்கும் போது காதலித்து வந்தது தெரியவந்தது. இந்தநிலையில் அங்குள்ள கோவிலில் வைத்து இருவரும் 2022-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறாள்.
இந்தநிலையில், இதுபற்றி விசாரணை நடத்த சென்ற சமூக நல விரிவாக்க அலுவலர் பானுவை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை திருமணம் செய்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அதிகாரியை பணி செய்யாமல் விடாமல் தடுத்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.