சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் கைது செய்யப்பட்டான்.

Update: 2023-06-05 18:45 GMT

விருத்தாசலம்:

விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவன் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமானாள். இது பற்றி பெற்றோருக்கு தெரிந்தால் பிரச்சினை ஏற்படும் என சிறுமி கருதினாள். இதையடுத்து அவள் கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்ததாக தெரிகிறது.அப்போது சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அந்த சிறுமியை மிட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிறுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்