பெயிண்டரை பீர்பாட்டிலால் தாக்கிய வாலிபா் கைது
பெயிண்டரை பீர்பாட்டிலால் தாக்கிய வாலிபா் கைது செய்யப்பட்டார்.
கரூர் திருமாநிலையூரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27). பெயிண்டரான இவர், சம்பவத்தன்று மக்கள் பாதை அருகே தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேது (24), சரத்குமார் (25) தினகரன் ஆகிய 3 பேரும் ராஜேசுடன் பேசியுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சேது தான் மறைத்து வைத்திருந்த பீர்பாட்டிலை எடுத்து ராஜேஷை தாக்கினார். இதில் அவருக்கு தலை, உதடு உள்ளிட்ட காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில், கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து, சேதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.