மாணவியை தாக்கிய வாலிபர் கைது
திருவோணம் அருகே பள்ளிக்குள் புகுந்து மாணவியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
ஒரத்தநாடு;
திருவோணம் பகுதியைச் சேர்ந்த ஒரு அரசு பள்ளியில் 17 வயதுடைய மாணவி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பள்ளியில் இருந்தார். அப்போது பள்ளிக்குள் புகுந்த ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி (வயது27) பள்ளியில் இருந்த 17 வயது மாணவியை கன்னத்தில் அறைந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.