மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

ஓமலூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-18 19:37 GMT

ஓமலூர்

ஓமலூரை அடுத்த அடைக்கனூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் தினேஷ் (வயது 19). இவரும், அதே பகுதியை சேர்ந்த செங்குட்டுவன் என்பவரும் மோட்டார் சைக்கிளில் 2 மூட்டைகளில் மதுபாட்டில்களை கடத்தி சென்றனர். அவர்களை ரோந்து பணியில் ஈடுபட்ட ஓமலூர் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது செங்குட்டுவன் தப்பி ஓடிவிட்டார். தினேசிடம் விசாரித்தபோது 2 மூட்டைகளில் 160 மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், தினேசை கைது செய்தனர். மேலும் செங்குட்டுவனை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்