மதுபாட்டில்கள் விற்றவர் கைது
ரிஷிவந்தியம் அருகே மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்ப்படடாா்.;
ரிஷிவந்தியம்:
ரிஷிவந்தியம் அருகே பாவந்தூரில் ஒரு வீட்டின் பின்புறம் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு சென்றனர். அப்போது சேவி மகன் ராஜமாணிக்கம் (55) என்பவர் அனுமதி இன்றி மதுபாட்டில்கள் விற்றது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.