பெண்ணுக்கு பாட்டில் குத்து; கணவர் கைது
பெண்ணை பாட்டிலால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.
பேட்டை:
பேட்டை கருங்காடு ரோடு பாண்டியாபுரம் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 37) கூலி தொழிலாளியான இவரது மனைவி முத்துமாரி (30). நேற்று பொன்ராஜ் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த பொன்ராஜ் மதுபாட்டிலால் மனைவியின் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்ராஜை கைது செய்தனர்.