எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் யோகா பயிற்சி

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-14 14:14 GMT

யோகா பயிற்சி

சிவகங்கை மாவட்டம் அரசனூர் இழுப்பக்குடி கிராமத்தில் ராணுவ பயிற்சி மையம் அமைந்துள்ளது. அந்த பயிற்சி மையத்தில் இருந்து இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கொடைக்கானலுக்கு வந்தனர்.

வருகிற 21-ந்தேதி உலக யோக தினம் அனுசரிப்பதையொட்டி இவர்கள் சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வளாகத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

மனநிம்மதி

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. அட்ச்சல்ஷர்மா, துணை கமாண்டன்ட் துர்கேஷ் ஆகியோர் தலைமையில் யோகா விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. இதில் பிரையண்ட் பூங்கா பணியாளர்கள், சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு யோகா பயிற்சி குறித்து டி.ஐ.ஜி. அட்ச்சல்ஷர்மா, துணை கமாண்டன்ட் துர்கேஷ் ஆகியோர் கூறுகையில், வருகிற 21-ந்தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. யோகா கலையின் மருத்துவ நிலை, மன நிம்மதி, நோய் ஏற்படாமை குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்