திருப்பத்தூர் நூலகத்தில் போட்டி தேர்வுக்கான புத்தகங்கள்
திருப்பத்தூர் நூலகத்தில் போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் உள்ளன.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் அரசுப்பொது நூலகத்துறை சார்பில் போட்டித்தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், ஆராய்ச்சி மாணவர்கள், எளிதாகப் பயன்பெறும் வகையில் அனைத்துத்துறை சார்ந்த புத்தகங்களும், சட்ட வல்லுனர்கள் பயன்படுத்தும் சட்ட நூல்கள், செந்தமிழ் இலக்கிய நூல்கள், மருத்துவ நூல்கள், மற்றும் சிறுவர் பிரிவு குடிமைப்பணி பயிற்சி பிரிவு உள்ளிட்ட ஏராளமான வகைகள் சார்ந்த புத்தகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை போட்டித் தேர்வாளர்களும் மாணவர்களும் பொதுமக்களும் பயன்படுத்திக் கொண்டு ெகாள்ள வேண்டும் என நூலகர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.