நூல் வெளியீட்டு விழா

கடையநல்லூர் அருகே நூல் வெளியீட்டு விழா நடந்தது;

Update: 2022-12-11 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே வடகரை பெரிய பள்ளிவாசல் திருமண மண்டபத்தில் எழுத்தாளர் கடையநல்லூர் சேயன் இப்ராஹிம் எழுதிய `வரலாறு அறிவோம்' நூல் வெளியீட்டு விழா நடந்தது. பள்ளிவாசல் தலைவர் அசனார் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட அரசு காஜி முஹ்யித்தீன் ஹஜ்ரத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்காசி மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், வடகரை பேரூராட்சி தலைவர் ஷேக் தாவூது, மடத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது இப்ராஹீம், வடகரை தீ.ப.பள்ளிவாசல் தலைவர் அப்துல் கபூர், ரஹ்மானியபுரம் பள்ளிவாசல் தலைவர் காதர் மைதீன், அல் அஸ்கர் பள்ளிவாசல் தலைவர் மீரான் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் வரவேற்று பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொது செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், நூலை வெளியீட்டு சிறப்புரையாற்றினார்.

மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், ஜமாஅத்துல் உலமா சபை மாவட்ட பொருளாளர் கே.ஐ.சாகுல் ஹமீது, வாவாமைதீன், ஆசிரியர் சாகுல் ஹமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் எம்.ஏ.முஹம்மது ஷெரீப், முஸ்லிம் யூத் மாநில துணை தலைவர் ஹபிபுல்லா, நெல்லை மாவட்ட யூத் லீக் செயலாளர் முஹம்மது நயினார் கடாபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்