கரூரில் புத்தக திருவிழா தொடங்கியது

கரூரில் புத்தக திருவிழா தொடங்கி உள்ளது.;

Update: 2023-10-06 18:44 GMT

கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரூர்-கோவை சாலையில் உள்ள பிரேம் மஹாலில் நேற்று புத்தக திருவிழா தொடங்கியது. இதனை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கலெக்டர் கூறியதாவது:- 7 கோடி ரூபாய் செலவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புத்தம் புதிய நூலக கட்டிடம் அமைய உள்ளது. அதற்கு ஏற்கனவே மாநகராட்சியில் வேலைக்கான ஆணை வழங்கப்பட்டு விட்டது. இதனை கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் விரைவில் ஆரம்பிக்க உள்ளோம். ஓராண்டிற்குள் புதிய மிகச்சிறந்த நூலகம் அமைய உள்ளது. கடந்த ஆண்டு புத்தக திருவிழாவில் அறிஞர் அண்ணா ஊராட்சி நூலகங்களுக்கும், சில பள்ளிகளில் உள்ள நூலங்களுக்கும் கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய் அளவிற்கு விற்பனையாளர்களிடம் புத்தகம் பெற்றுக் கொண்டோம், என்றார்.இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாநகராட்சி துணை மேயர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்