பழனிசெட்டிபட்டியில் நடைபெறும் புத்தக திருவிழா நாளை வரை நீட்டிப்பு

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் நடைபெறும் புத்தக திருவிழா நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-11 21:30 GMT

தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதல் புத்தகத் திருவிழா பழனிசெட்டிபட்டியில், கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் இந்த புத்தக திருவிழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) புத்தக திருவிழா நிறைவு பெறுவதாக இருந்தது.

தினமும் இங்கு மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். இந்த புத்தக திருவிழாவை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் புத்தக வாசகர்கள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று புத்தக திருவிழாவை மேலும் ஒருநாள் நீட்டிப்பு செய்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். அதன்பேரில், இன்று நிறைவு பெறுவதாக இருந்த புத்தக திருவிழா, நாளை (திங்கட்கிழமை) வரை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்