புத்தக திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் புத்தக திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-04-22 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசு நடத்தும் புத்தக திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி தலைமை தாங்கினார். தாசில்தார் சுவாமிநாதன் வரவேற்றார். ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கதிரேசன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை ஸ்ரீமதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

நிகழ்ச்சியில், சிறு புத்தக கண்காட்சி, பாரம்பரிய உணவு பொருட்கள், பனை ஓலையில் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான பாதுகாப்பு கருவிகள் போன்றவைகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்து. இதில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, காஞ்சி ஸ்ரீ சங்கர அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், சிலம்பம் மற்றும் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், வருவாய்த்துறை ஊழியர்கள் பாடல்களை பாடி அசத்தினர்.

நிகழ்ச்சியில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருச்செந்தூர் வருவாய் துறையுடன், இணைந்து ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கவிதா செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்