வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் மாரியப்பன், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி உதவி தலைமை ஆசிரியை லட்சுமி வரவேற்றார். கண்காட்சியை புளியங்குடி பரமானந்தா நடுநிலைப் பள்ளி நிர்வாகி ஞானப்பிரகாசம் திறந்துவைத்தார். சிறப்பு விருந்தினராக புளியங்குடி ரோட்டரி சங்க முன்னாள் செயலர் ஜேம்ஸ் ஆரோக்கிய ராஜ் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயகணேஷ், ஆசிரியர்கள் மாரியப்பன், இந்திராணி, வேல்த் தாய் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலர் விண்ணரசு நன்றி கூறினார்.