பொம்மிடியில்ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் நீரால் வாகன ஓட்டிகள் அவதி
பாப்பிரெட்டிப்பட்டி:
பொம்மிடியில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து ெரயில்வே நிர்வாகம், பொ.மல்லாபுரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.