சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update: 2022-08-27 03:43 GMT

சென்னை,

சென்னை, போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு வந்த அழைப்பில் சென்னையிலிருந்து துபாய் செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது. அந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அந்த விமானத்திலும், விமான நிலையத்திலும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், இன்று காலை 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் சுமார் 160 பயணிகள் இருந்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு யார்? தகவல் அளித்தார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்