சென்னை ரெயில் நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... போலீசார் வலைவீச்சு

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-08-21 15:05 IST

சென்னை,

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்தை, காலை 7.15 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர், காலை 8 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் எனக்கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

உடனடியாக சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து வியாசர்பாடியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட மணிகண்டன் என்ற இளைஞர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. மேலும் இதற்கு முன்பும் அவர் இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்த நிலையில், மணிகண்டனை தேடி போலீசார் விரைந்தனர்.

விரைவில் மணிகண்டன் கைது செய்யப்படலாம் என கூறப்படும் நிலையில், மனநலம் பாதித்த நபர் என்பதால் அவரது பெற்றோரிடம் போலீசார் எச்சரிக்கை மட்டும் விடுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.Full View

Tags:    

மேலும் செய்திகள்