நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயம்
நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயம் அடைந்தது.
வாடிப்பட்டி,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி வடக்குதெருவை சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது 48). இவர் பசு மாடு வளர்த்து வருகிறார். நேற்று மாலை அங்குள்ள மலையடிவாரத்தில் அந்த பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை பசு கடித்தது. உடனே பயங்கர சத்தத்துடன் வெடி குண்டு வெடித்தது. இதில் மாட்டின் வாய் பகுதி பிளந்து ரத்தம் கொட்டியது. இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டு வெடித்தது தெரியவந்தது. அதை அங்கு வீசி சென்றது யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.