பாய்லர் ெவடித்து 5 தொழிலாளர்கள் படுகாயம்

Update: 2023-10-09 15:42 GMT


திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து 5 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பனியன் நிறுவனம்

திருப்பூர் மங்கலம் சாலை பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் ரெட்டி (வயது 48). இவர் பாரப்பாளையத்தை அடுத்த ஆண்டிபாளையம் மின் வாரிய அலுவலகம் அருகே பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.

இங்கு நேற்று காலை 9 மணி அளவில் வழக்கம்போல் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சலவை செய்யும் பாய்லரை இயக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால் பாய்லர் சரிவர இயங்காததால் அதனை சரி செய்யும் பணியில் திருப்பூர் கே.வி.ஆர்.நகரைச் சேர்ந்த கண்ணதாசன் (43) என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று பாய்லர் வெடித்தது. இதில் கண்ணதாசன் மற்றும் அருகில் நின்ற பாபுநரேன் (27), மணிகண்டன் (43), முத்துக்குமார் (25), தனக்குமார்பாய்லர் ெவடித்து 5 தொழிலாளர்கள் படுகாயம் (20) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

உரிமையாளர் மீது வழக்கு

மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாதர்நிஷா, சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பாய்லர் முறையாக பராமரிப்பு செய்யப்படாமல் இருந்ததாக நிறுவனத்தின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்