ரெயில்வே தண்டவாளத்தில் ரத்த காயங்களுடன் வாலிபர் பிணம்

பெண்ணாடம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் ரத்த காயங்களுடன் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-12-02 18:45 GMT

பெண்ணாடம், 

ரத்த காயங்களுடன் வாலிபர் பிணம்

பெண்ணாடம் அருகே வெள்ளாற்றின் குறுகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைபார்த்த அவ்வழியாக சென்றவர்கள், இதுபற்றி விருத்தாசலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா?

மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்து தண்டவாளத்தில் வீசிச் சென்றார்களா? அல்லது அவர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்