எடப்பாடி:-
எடப்பாடி அருகே கிணற்றில் வாலிபர் பிணமாக கிடந்தார். அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
வாலிபர் பிணம்
எடப்பாடி அருகே சித்தூர் ஊராட்சி, புளியம்பட்டி பிரிவு சாலை அருகே வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று காலை 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி கிராம நிர்வாக அதிகாரிஅப்புசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அளித்த புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கிணற்றில் மிதந்த வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினர்.
போலீசார் விசாரணை
விசாரணையில், கிணற்றில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் அருண்குமார் (22) என்பதும், வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்பது தெரிய வந்தது. அவர், எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. அவர், தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும் அருண்குமார் பிணமாக கிடந்தது தொடர்பாகவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது.