ராமநத்தம் அருகே வெள்ளாற்றில் தொழிலாளி பிணம் போலீஸ் விசாரணை

ராமநத்தம் அருகே வெள்ளாற்றில் தொழிலாளி பிணமாக கிடந்தாா். இதுகுறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.;

Update: 2022-09-15 18:45 GMT


ராமநத்தம்,

ராமநத்தம் அடுத்த அரங்கூரை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 70). இவர் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள வெள்ளாற்றில், வீரமுத்து பிணமாக மிதந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீரமுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது, ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்