கொள்ளிடம் ஆற்றில் கூலித்தொழிலாளி பிணம்
கொள்ளிடம் ஆற்றில் கூலித்தொழிலாளி பிணம்;
சுவாமிமலை அருகே உள்ள நீலத்தநல்லூர் மேலாத்துக்குறிச்சி கீழத்தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது53). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 4-ந்தேதி மதியம் ஆடு மேய்க்க சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஒருவர் இறந்துகிடப்பதாக அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சுவாமிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்ெபக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளிடம் ஆற்றங்கரையில் பிணமாக கிடந்த சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.