தண்வாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்
இச்சிபுத்தூர்-திருத்தணி ரெயில் நிலையத்திற்கு இடையே தண்வாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூர்-திருத்தணி ரெயில் நிலையத்திற்கு இடையே கீழாந்தூர் கிராமம் பகுதியில் திருப்பதி ரெயில் மார்கத்தில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.