தண்டவாளத்தில் வாலிபர் பிணம்-யார் அவர்? போலீசார் விசாரணை
தண்டவாளத்தில் வாலிபர் பிணம்-யார் அவர்? போலீசார் விசாரணை
சோழவந்தான்
சோழவந்தான் ெரயில்வே கேட் தண்டவாள பகுதியில் வாலிபர் பிணம் கிடந்தது. இதுகுறித்து சோழக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ெரயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஹீமாயூன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இறந்தவர் யார் என தெரியவில்லை. கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் ெரயிலில் வந்தவர் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் எனவும், இறந்த வாலிபருக்கு 35 வயது இருக்கும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.