கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்-யார் அவர்? போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து கட்டிகானப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் முகமது சுபன் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.