வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறையினால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளதை படத்தில் காணலாம்.