விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது
விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது .
வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும், இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் (புதன்கிழமை) மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறையினர் எச்சரித்துள்ளனர். மீறி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் விசைப்படகு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.