மானத்தாள் ஏரியில் தெப்பத்திருவிழா
மானத்தாள் ஏரியில் தெப்பத்திருவிழா நடந்தது.
தாரமங்கலம்:-
தாரமங்கலம் அருகே மானத்தாள் ஊராட்சிக்கு உட்பட்ட மானத்தாள் ஏரி பகுதியில் உள்ள மலையில் வேட்ராயப்பெருமாள் கோவிலும், ஏரியின் அருகில் சென்றாயப்பெருமாள் கோவிலும் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வேட்ராயப்பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து வேட்ராயப்பெருமாள் சோரகைமலையில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து கண்காணிப்பட்டி கோவில் வீட்டுக்கு புஷ்ப பல்லக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் நேற்று மாலை மானத்தாள் ஏரியில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கண்காணிப்பட்டி கோவில் வீட்டில் சிறப்பு அலங்காரம், பூைஜ செய்யப்பட்டு, வேட்ராயப்பெருமாள் தெப்பத்துக்கு அழைத்து வரப்பட்டார். இதே போல சென்றாயப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.