சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் தெப்ப திருவிழா

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் தெப்ப திருவிழா

Update: 2023-08-09 19:26 GMT

ஆடிகிருத்திகையையொட்டி சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தெப்ப திருவிழா

ஆடி கிருத்திகையில் ஆறுமுகனை வழிபட தேடிவரும் நன்மை என்பது ஆன்றோர் வாக்கு. ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி

ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மாலை 7 மணி அளவில் தெப்ப திருவிழாநடைபெற்றது. இதில் காலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பஸ்கள்

பக்தர்களுக்கு சுவாமிமலை பேரூராட்சி செயல் அலுவலர் சரவணவேல், சுவாமிமலை பேரூராட்சி மன்ற தலைவர் வைஜெயந்தி சிவக்குமார் ஆகியோர் ஆலோசனையின் படி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆடி கிருத்திகையையொட்டி தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்