பாண்டுகுடி லெட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்

பாண்டுகுடி லெட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்;

Update: 2022-06-20 18:44 GMT

தொண்டி

திருவாடானை அருகே உள்ள பாண்டுகுடியில் ஆயிரவைசிய மஞ்சப்புத்தூர் சமூக சபைக்கு பாத்தியப்பட்ட லெட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 108 கலச அபிஷேகம் மற்றும் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி லெட்சுமி நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனமும், 108 கலசங்கள் வைத்து யாக வேள்விகள் நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் கோவிலுக்கு தெப்பத்தில் எழுந்தருளினார். அங்கு தெப்ப உற்சவம் நடைபெற்றது. பின்னர் சுவாமி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்