ஓசூர்
ஓசூர் நேதாஜி ரோட்டில் பிரசித்தி பெற்ற கோதண்டராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பவித்ரோத்சவ விழா நடைபெற்றது. விழாவையொட்டிநேற்று முன்தினம் சம்வத்சரோத்சவ நிகழ்ச்சியும், இரவு ஓசூர் ராமநாயக்கன் ஏரி அருகே ஜலகண்டேஸ்வரர் கோவில் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெற்றது. அப்போது, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமியை வைத்து குளத்தை சுற்றி 3 முறை தெப்பம் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.