காட்சிப்பொருளான படகுகள்

மண்டபம் கடற்கரை பூங்காவில் காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளால் ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் திரும்பி செல்கின்றனர்.

Update: 2022-06-26 15:51 GMT

பனைக்குளம், 

மண்டபம் கடற்கரை பூங்காவில் காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளால் ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் திரும்பி செல்கின்றனர்.

கடற்கரை பூங்கா

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன்ரோடு பாலத்தின் நுழைவு பகுதியில் அல்லது மண்டபம் கடற்கரை பூங்கா உள்ளது. மண்டபம் பேரூராட்சியின் கீழ் செயல்படும் இந்த கடற்கரை பூங்காவில் குழந்தைகள் விளையாடும் வகையில் ஏராளமான ஊஞ்சல்கள் மற்றும் சருக்குகள் உள்ளிட்டவைகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன.

இங்குவரும் சுற்றுலா பயணிகள் கடல் மற்றும் கடற்கரை பகுதியை பார்த்து ரசிக்கும் வகையில் கடற்கரையோரம் ஏராளமான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கடற்கரை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் சென்று பார்த்து ரசிக்கும் வகையில் கண்ணாடிஇழை படகு போக்குவரத்து நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் மண்டபம் கடற்கரை பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டு வந்த 2 பிளாஸ்டிக் கண்ணாடி இழை படகுகளும் சேதமடைந்த நிலையில் பல மாதங்களாக காட்சிப் பொருளாகவே கடற்கரை பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கடற்கரை பூங்காவிற்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்ணாடி இழை பைபர் படகில் சென்று கடலை பார்த்து ரசிக்க முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

கோரிக்கை

மண்டபம் கடற்கரை பூங்காவில் காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கண்ணாடி இழை பைபர் படகை முழுமையாக பராமரித்தோ அல்லது புதிய பிளாஸ்டிக் படகுகள் வாங்கியோ கடற்கரை பூங்காவில் இருந்து பாம்பன் பாலம் வரையிலான கடல் பகுதியில் மீண்டும் சுற்றுலா படகு போக்குவரத்து திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், சுற்றுலா ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்