உடுமலையில் அதிகரிக்கும் விளம்பர பதாகைகளால் விபத்து அபாயம்

Update: 2023-01-04 17:10 GMT


உடுமலையில் முக்கிய வீதிகளில் அதிகரிக்கும் விளம்பரப் பதாகைகளால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

விளம்பர உத்தி

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் விளம்பரப் பதாகைகள் வைப்பது வணிக நிறுவனங்களின் விளம்பர உத்திகளில் ஒன்றாக உள்ளது. இதுதவிர விழாக்கள், நினைவஞ்சலி உள்ளிட்ட பல்வேறு விளம்பரப் பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு வருகிறது.

இவை பெரும்பாலும் சாலை சந்திப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் அமைக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு கவனச் சிதறல்கள் ஏற்பட்டு விபத்தில் சிக்குகின்றனர். இதுதவிர விளம்பரப்பலகைகள் காற்றில் சரிந்து விழுந்து விபத்துக்கள் ஏற்படுவதும் உண்டு.உடுமலையில் அதிகரிக்கும் விளம்பர பதாகைகளால் விபத்து அபாயம்உடுமலையில் அதிகரிக்கும் விளம்பர பதாகைகளால் விபத்து அபாயம்

விபத்துக்கள்

கோவை, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் விளம்பரப் பதாகைகளால் ஏற்பட்ட விபத்துக்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.எனவே விளம்பரப் பதாகைகள் அமைப்பதற்கான விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.ஆனாலும் முறையான அனுமதி இல்லாமல் விளம்பரப் பதாகைகள் அமைப்பது தொடர்கதையாகவே உள்ளது. அந்தவகையில் உடுமலை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் காந்திநகர் பகுதியில் பஸ் நிறுத்தத்தையே மறைத்து விளம்பரப் பதாகைகள் அமைப்பது அடிக்கடி நடைபெறும் நிகழ்வாக உள்ளது. இதுதவிர உடுமலை மத்திய பஸ் நிலையம், குட்டை திடல், ராமசாமி நகர் ெரயில்வே கேட் உள்ளிட்ட பல இடங்களில் அதிக எண்ணிக்கையில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை நகராட்சி அனுமதில்லாமல் அமைக்கப்பட்டதாகும். எனவே விபத்துக்களைத் தடுக்கும் வகையில் அவற்றை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் நகராட்சி அனுமதி எண் பெறப்படாத விளம்பரப் பதாகைகளை அமைக்கும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்