சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பா.ம.க. வேண்டுகோள்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பா.ம.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.;

Update:2023-10-09 00:57 IST

பெரம்பலூர் மாவட்ட பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டம் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளர் வைத்தி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி அனைத்து சமூகத்தினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் வலியுறுத்திய புள்ளி விவரங்களை விரைவாக சேகரித்து இனியும் தாமதம் செய்யாமல் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் வகையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறும் செயல் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்கப்படாததால், அதற்காக கையகப்படுத்தப்பட்ட விளை நிலங்களை விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கட்சியின் மாவட்ட தலைவர் மதுரா நாட்டார் செல்வராசு வரவேற்றார். முடிவில் நகர செயலாளர் இமயவர்மன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்