தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள அரசூர் பூச்சிக்காடு ஜெயந்திநாதர் அகாடமி மரைன் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லூரி செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். தூத்துக்குடி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், வட்டார மருத்துவ அலுவலர் ஐலின் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி பிரின்ஸ் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் நன்றி கூறினார். முகாமில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி அலுவலர் டாக்டர் சண்முகப்பிரியா தலைமையிலான குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.
முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம், சுகாதார ஆய்வாளர் ஜெயபால், செவிலியர் ஷேர்லி, மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.