அரசு மகளிர் கல்லூரியில் ரத்ததான முகாம்

விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.;

Update: 2023-04-13 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் கணேசன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் செல்வராணி வரவேற்றார். டாக்டர்கள் பாலதண்டாயுதம், திருமாவளவன், கோலியனூர் வட்டார மருத்துவ அலுவலர் கோமதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இம்முகாமில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் கலந்துகொண்டு ரத்தம் சேகரித்தனர். இதில் கல்லூரி மாணவிகள் பலர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். முகாமின் முடிவில் வணிகவியல் துறை 3-ம் ஆண்டு மாணவி திலோத்தமா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்