ரத்த தான முகாம்

ரத்த தான முகாம் நடந்தது.;

Update:2023-03-05 00:08 IST

அரியலூரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். முகாமில் 250-க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாநில சட்ட திட்ட குழு உறுப்பினர் சுபா சந்திரசேகர், க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ., மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜன் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்