ஆலங்குளத்தில் ரத்ததான முகாம்

ஆலங்குளத்தில் ரத்ததான முகாம் நடந்தது.

Update: 2022-11-27 18:45 GMT

ஆலங்குளம்:

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 68-வது பிறந்த நாள் விழா மற்றும் மாவீரர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை பாசறை சார்பில், ரத்த தான முகாம் நடைபெற்றது. ஆலங்குளம்- அம்பை சாலையில் உள்ள வியாபாரிகள் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தொகுதி தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அரசு மருத்துவர் ரவிச்சந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்தம் சேகரித்தனர். இதில் நாம் தமிழர் கட்சியினர் பலர் பங்கேற்று ரத்தம் தானமாக கொடுத்தனர்.

நிகழ்ச்சியில், தொகுதி இணைச் செயலாளர் செல்வகுமார், இளைஞர் பாசறைச் செயலாளர் அருணை மாரியப்பன், ஆலங்குளம் பேரூர் தலைவர் சுரேஷ் சொக்கலிங்கம், பேரூர் துணைத் தலைவர் மயில்ராஜ், முக்கூடல் பேரூர் செயலாளர் பால்துரை, கீழப்பாவூர் ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரன், கீழப்பாவூர் ஒன்றிய இணைச் செயலாளர் மாதவன், ஆலங்குளம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்