ரத்ததான முகாம்

கடையநல்லூரில் ரத்ததான முகாம் நடந்தது.

Update: 2022-11-27 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகர தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மணிக்கூண்டு அருகே முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் நகரச் செயலாளர் அப்பாஸ் முன்னிலையில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கடையநல்லூர் யூனியன் துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ், நகராட்சி கவுன்சிலர் முருகன், வார்டு செயலாளர் சாகுல் ஹமீது, காளிமுத்து, திரிகூடபுரம் பஞ்சாயத்து துணை தலைவர் மீரான் உட்பட உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து ரஹ்மானியாபுரம் அனைத்து வார்டு கிளை சார்பில் பைஜூள் அன்வர் அரபிக் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம், மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம், பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை முகாமை தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி கவுன்சிலர் முகைதீன் கனி செய்திருந்தார். இதில் அரசு தலைமை ஹாஜி முகைதீன் அன்சாரி, நகராட்சி கவுன்சிலர் முருகன், வார்டு செயலாளர்கள் அப்துல் ரசாக், அமானுல்லா, மீராசா, சையது மசூது உட்பட உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 6- வார்டு சார்பில் இளைஞர்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்