ரத்த தான முகாம்

கடையநல்லூர் அரசு பள்ளியில் ரத்த தான முகாம்- கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்

Update: 2022-08-14 17:08 GMT

கடையநல்லூர்:

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அனைத்து கிளை சார்பாக கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தென்காசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியும், இணைந்து ரத்ததான முகாமை நடத்தியது.

மாவட்ட தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் அப்துல்பாசித், மாவட்ட துணை தலைவர் செய்யது மசூது, மாவட்ட செயலாளர்கள் ஹாஜா, பீர்முகமது, புளியங்குடி பிலால், அன்வர் சாதிக், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்துல்பாசித், தொண்டரணி செயலாளர் புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அப்துல் சலாம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரத்ததானத்தில் தமிழக அளவில் தொடர்ந்து முதலிடம் வகிப்பதை சுட்டிக்காட்டி பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் ஆகாஷ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை துணை ஆட்சியர் குணசேகரன், நகர்மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். தென்காசி அரசு மருத்துவமனை ரத்தவங்கி டாக்டர் பாபு தலைமையில் மருத்துவகுழுவினர் ரத்ததானத்தை பெற்றுக் கொண்டனர்.

முகாமில் அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்துகொண்டு கொண்டனர். இதில் கோமதிசங்கர் என்பவருடைய மனைவி கவுரி சங்கர், பூபதி உள்பட 41 நபர்கள் ரத்ததானம் செய்தனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் ரத்ததானம் செய்ய வருகை தந்தனர். ஆனால் இவர்களின் ரத்தவகையை மட்டும் கண்டறியப்பட்டு அவசர தேவைக்கு பயன்படுத்தி கொள்ளவது என்று மாவட்ட ரத்தவங்கி குழுவினர் கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் அவர்களின் தொடர்பு எண் மற்றும் முகவரிகளை பதிவு செய்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்த நபர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

முகாமில் கடையநல்லூர் அனைத்து கிளை தலைவர்கள் மற்றும் மருத்துவ அணி செயலாளர்கள் ஜாபர் அலி, உமர்பாருக், சிராஜிதீன், அப்துல்லாஹ், முஹம்மது பிலால், உமர் மைதீன், கிளைத்தலைவர்கள் அப்துல் ஜப்பார், பாரூக், நிரஞ்சன் ஒலி, சேகனா, குல்லி அலி, முகம்மது அலி, குல்லி அலி ஆகியோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்