ரத்த தான முகாம்

கலவை அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்

Update: 2022-07-01 18:16 GMT

கலவை

தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு கலவை ரோட்டரி சங்கம், வாலாஜா அரசு மருத்துவமனை ரத்த வங்கி, கலவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் இணைந்து கலவை அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமை நடத்தினர்.

முகாமுக்கு மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் நந்தினி, ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் சுஜிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலவை மருத்துவ அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் வரவேற்றார்.

முகாமில் 33 பேர் ரத்த தானம் வழங்கினர். தானமாக பெறப்பட்ட ரத்தம் வாலாஜா அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் சேர்க்கப்பட்டது.

முகாமில் கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, கலவை ரோட்டரி சங்கத் தலைவர் சதீஷ், செயலாளர் நந்தகுமார், பொருளாளர் ரவி, முன்னாள் ரோட்டரி சங்க தலைவர்கள் தியாகராஜன், தாண்டவராயன், சண்முகம், செவிலியர்கள் சந்தோஷ், ஸ்ரீதேவி, ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்