ரத்ததான முகாம்
ரத்ததான முகாமை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்து, மரக்கன்று நட்டார்.
வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டையில் நேரு யுவகேந்திரா மாணவர் பிரிவு சார்பில் நடந்த ரத்ததான முகாமை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்து, மரக்கன்று நட்டார். இதில் 25 பேர் ரத்ததானம் செய்தனர். டாக்டர் ரூபின்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.