வேலூரில் போக்குவரத்து மண்டல அலுவலகம் முற்றுகை

வேலூரில் போக்குவரத்து மண்டல அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-22 18:12 GMT

வேலூரில் போக்குவரத்து மண்டல அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சி.ஐ.டி.யு. சார்பில் அலமேலுமங்காபுரம் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையொட்டி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 11 மணி அளவில் போக்குவரத்து தொழிலாளர்கள் அங்கு வந்தனர்.

அவர்கள் மண்டல அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகம் உள்ளே செல்ல முற்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கதவினை பூட்டினர். அதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாநில துணை செயலாளர் பரசுராமன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். தலைவர் இளங்கோ வரவேற்றார்.

ஓய்வுகால பலன்கள்

போராட்டத்தில், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். பணி ஓய்வு, தன்விருப்ப ஓய்வு, மரணமடைந்த தொழிலாளர்களுக்கு ஓய்வுகால பலன்களை உடனே வழங்க வேண்டும்.

பணி ஓய்வு பெறும் போது வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்புவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்