விளாத்திகுளத்தில் பா.ஜ.க.வினர் சாலைமறியல் போராட்டம்

விளாத்திகுளம் அருகே மணல் குவாரி அனுமதியை ரத்து செய்யக்கோரி பா.ஜனதா கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-13 14:01 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே மணல் குவாரி அனுமதியை ரத்து செய்யக்கோரி பா.ஜனதா கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் மணல் குவாரி அனுமதியை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க.வினர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில், விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் சம்பவ பகுதிக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தாலுகா அலுவலகம் முற்றுகை

இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்க சென்றனர்.

அங்கு பணியிலிருந்த தலைமையிடத்து துணை தாசில்தாரிடம் பா.ஜ.க.வினர் புகார் அளிக்க சென்றனர்.

அப்போது அவர்களை வெளியேற சொன்னதுடன், போலீசார் மூலம் கைது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

கலந்து கொண்டவர்கள்

இந்த போராட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ராம காளியப்பன், பா.ஜ.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆத்திராஜ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் பூவேஷ், வர்த்தக அணி பொதுச்செயலாளர் சரவண பாலக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்