தலைவர்கள் படத்துக்கு பா.ஜ.க.வினர் மரியாதை
சமூகநீதி வாரம் கடைபிடிப்பு: தலைவர்கள் படத்துக்கு பா.ஜ.க.வினர் மரியாதை
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் மாவட்ட பா.ஜ.க சார்பில் சமூக நீதி வாரம் கடைபிடிப்பு நிகழ்ச்சி கச்சேரி சாலையில் நடைபெற்றது. இதற்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் வக்கீல் செல்வநாயகம், பட்டியல் அணி மாநில செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் ஹரி, மாநில செயற்குழு உறுப்பினர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் இரட்டைமலை சீனிவாசன், பண்டிதர் அயோத்திதாசர், கக்கன், சகஜானந்தா, வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், வீரதமிழச்சி குயிலி ஆகியோரின் உருவபடங்களுக்கு கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன், துணை தலைவர் சர்தார்சிங், பொருளாளர் குமரவேல், மாநில சிறுபான்மை அணி பொருளாளர் ஸ்ரீசந்த், ஒன்றிய தலைவர் முத்து, பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.