மின்கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மின்கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.;
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சங்கசாவடி பகுதியில் நேற்று பா.ஜ.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்டத் தலைவர் அஸ்வின் குமார் தலைமை தாங்கினார். திருவள்ளூர் நகர தலைவர் சதீஷ்குமார், நகரத் துணைத் தலைவர் ஆர்.ஆர்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் பால்கனகராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், மகளிர் அணி மாநில பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் கருணாகரன், ஞானம், ஆர்யா சீனிவாசன், ஜெய்கணேஷ், சீனிவாசன், மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை தலைவர் வக்கீல் கோ.சீத்தாராமன் உட்பட 300-க்கும் மேற்பட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். பொன்னேரியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதையும், மின்கட்டணம் உயர்த்துவதை கண்டித்தும் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். அரசு தொடர்புத்துறை மாநிலத் தலைவர் அழிஞ்சிவாக்கம் பாஸ்கரன் கண்டன உரையாற்றினார்.
இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் சோமுராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.