பா.ஜ.க.வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

பா.ஜ.க.வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2022-07-07 20:15 GMT

புதுக்கோட்டை பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் எலுமிச்சம்பழம் மாலை அணிவித்து கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நூதனமான முறையில் மனு கொடுத்தனர். அதில், புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு முழுமையான சிகிச்சை இல்லை. உடல்நிலை சரியில்லாமல் வருகின்ற நோயாளிகளை இங்கே பார்க்க முடியாது என்று தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்க்கக்கூடிய சிகிச்சை கூட புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பார்க்காமல் மக்களை வேதனையடைய செய்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் மருத்துவ களப்பணி ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதில் அரசியல் தொடர்பு மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராஜன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் பாலா ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்