பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான தி.மு.க. அரசை கண்டித்து புதுக்கோட்டை பா.ஜ.க. சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமை தாங்கினார். நகர தலைவர் காடுவெட்டி குமார் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், சுந்தரவேல் உள்பட பலர் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.