தாளவாடியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தாளவாடியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தாளவாடி
தாளவாடி பஸ் நிலையம் அருகே பல்வேறு அரசு துறைகளை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் மகாதேவப்பா தலைமை தாங்கினார்.
கோட்டமாளம் கிராமத்துக்கு பஸ் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.